உளுந்து ஜாமூன்
தேவையான பொருட்கள்:
உளுந்து - ஒரு ஆழாக்கு
பச்சரிசி (கைப்பிடியளவு) - 10 கிராம்
எண்ணெய் - 300 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
ஏலக்காய்பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உளுந்து, அரிசியையும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து விட்டு கிரைண்டரில் ஆட்டவும்.
ஆட்டும்போது இடைஇடையில் சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து ஆட்டவும். பொங்க பொங்க ஆட்டவேண்டும். தண்ணீரை ஊற்றக்கூடாது. உளுந்து எண்ணெய் குடிக்கும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 2 கிளாஸ் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கரண்டியால் கிண்டி சர்க்கரையை கரைய விடவும். கரைந்ததும் கொதிக்கவிடவும்.
சர்க்கரைப்பாகு பிசுப்பிசுப்பு வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். ஏலக்காய்பொடி (அ) எதாவது எசன்ஸ் இருந்தால் 1 சொட்டு விடவும் (அ) ஒரு துளி குங்குமப்பூ போடலாம்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை உருண்டையாக உருட்டி பொரித்தெடுத்து பாகில் போட்டு 1/2 மணி நேரம் ஊறவைத்து பரிமாறவும்.