உளுந்து களி

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 1 கப்

உளுந்து மாவு - 1/2 கப்

கடலை மாவு - 1/4 கப்

மைதா மாவு - 1/4 கப்

முட்டை - 3

சீனி - 1/2 கப்

பால் - 3/4 கப்

நெய் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

மாவு வகைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

அதனுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி பால் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்த மாவுக் கலவையை ஊற்றி கிளறவும்.

அடிபிடிக்காதவாறு நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு ஒன்று சேர்ந்து வரும் போது சீனியைச் சேர்த்து கிளறவும்.

கடைசியாக நெய் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

உளுந்து இடுப்பிற்கு பலம் தரும்.

இந்தக் களியை பாலுக்கு பதிலாக தேங்காய்ப் பாலும், எண்ணெய்க்கு பதிலாக நல்லெண்ணெயும் சேர்த்தும் செய்யலாம்.

சாலியாத் தூள் சேர்த்தும் செய்வதுண்டு. கடைசி படத்தில் உள்ளது தான் சாலியா. எள் போன்று மெரூன் கலரில் இருக்கும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.