உளுந்தங் களி

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மாவு தயாரிக்க:

உளுந்து - 1 கப் (பொன்னிறமாக வறுத்தது)

பச்சரிசி - 3 கப்

களி செய்ய:

அரைத்த மாவு --1 கப்

வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 (3/4 பாகம் போதும்)

நல்லெண்ணைய் - தேவையான அளவு

செய்முறை:

மாவு தயாரிக்க:

உளுந்து மற்றும் அரிசியை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரவை மில்லிலோ,குறைந்த அளவு என்றால் மிக்ஸியிலோ அரைக்கவும்... (தண்ணீரின்றி)

களி செய்ய:

மாவை நன்றாக தண்ணீராக கரைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை நன்றாக தட்டிக் கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் கரைத்த மாவை கொட்டி நன்றாக கிளறவும்.

நன்றாக வெந்து வரும் சமயம் வெல்லத்தை போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை கட்டியில்லாமல் கிளறவும்.

பரிமாறும் சமயம் 1 ஸ்பூன் நல்லெண்ணைய் ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்:

இது பெண்கள் வயதுக்கு வந்த சமயம் தருவார்கள்.

இடுப்பு வலி, மாதவிடாய் சமயத்தில் சாப்பிட்டால் பிற்காலத்தில் வலி ஏற்படாமல் பிரச்சினை குறைவாக இருக்கும்