உளுத்தம்பருப்பு அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுத்தம்பருப்பு - 1 கப்

நெய் - 1/2 கப்

பால்கோவா - 2 மேசைக்கரண்டி

சீனி - 1 கப்

பாதாம்பருப்பு - 20 கிராம்

சாரப்பருப்பு - 20 கிராம்

கேசரிப்பவுடர் - ஒரு சிட்டிகை

குங்குமப்பூ - 20

பன்னீர் - 2 தேக்கரண்டி

செய்முறை:

உளுத்தம்பருப்பை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் எடுத்து நன்கு கழுவி மிக்ஸியில் அல்லது உரலில் போட்டு வெண்ணெய் போல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அடுப்பில் வைத்து

நெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் உளுத்தம் மாவைப் போட்டு அடிப்பிடிக்காமல் கிளறவும்.

பிறகு மாவு நன்கு சிவந்து வந்ததும் பால்கோவா, சீனி ஆகியவற்றைப் போட்டு கிளறவும்.

தேவையெனில் நெய் சேர்த்து அல்வா பதத்திற்கு வரும்வரை கை விடாது கிளறவும்.

பாதாம்பருப்பை தோலுரித்து வறுத்து அல்வாவில் சேர்க்கவும். அதனுடன் சாரப்பருப்பையும் வறுத்துப் போடவும்.

குங்குமப்பூவை பன்னீரில் கரைத்து அல்வாவில் ஊற்றி கிளறி மூடி வைத்துவிடவும்.

சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பி ஆறியபிறகு தேவையான வடிவில் துண்டுகளாக போட்டுக் கொள்ளவும்.

குறிப்புகள்: