உருளைக்கிழங்கு அல்வா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு ( வேக வைத்து மசித்தது) - 1 கப்

சர்க்கரை - 1 கப்

நெய் - தேவைக்கு

பால் - 1/4 கப்

முந்திரி, திராட்சை - தேவைக்கு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைக்கவும். விரும்பினால் மிக்சியில் போட்டு அடித்து வைக்கவும். பாலை கொதிக்கவிட்டு சர்க்கரை சேர்த்து கரைய விடவும்.

கொதிக்கும் பாலில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கிளறவும்.

நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து வைக்கவும். அல்வா பதம் வரும் போது முந்திரி, திராட்சையை நெய்யோடு சேர்த்து கலந்து எடுக்கவும்.

கையில் மசித்தால் பால்கோவா போலும், மிக்ஸியில் அடித்தால் அல்வா போலும் வரும்.

குறிப்புகள்: