ஈஸி போளி

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்

தேங்காய்ப்பூ - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

நெய் - 50 கிராம்

எண்ணெய் - 2 தேக்கரண்டி

ஏலக்காய் - 5

வெல்லம் அல்லது சர்க்கரை - 1/4 கப்

உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

மைதாவில் உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் எண்ணெய் சேர்த்து இலகுவாக பிசைந்து ஒரு மணி ஊறவைக்கவும்.

ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு தேங்காய்ப்பூ போட்டு வதக்கி, பொடியாக்கிய ஏலக்காய் போட்டு கிளறி இறக்கி தூளாக்கிய வெல்லம் (அ) தூளாக்கிய சர்க்கரை போட்டு பிசறவும்.

மாவை எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கட்டையில் வட்டமாக தேய்க்கவும். அதன் நடுவில் தேங்காய்ப்பூ வைத்து சுற்றிலும் மூடி மறுபடியும் தேய்க்கவும்.

தோசைக்கல்லில் தேய்த்ததை போட்டு சுற்றிலும் நெய் விட்டு வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: