ஈஸி கேரட் அல்வா





4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கேரட் - 1/4 கிலோ
பால் - 1/4 லிட்டர்
சர்க்கரை - 1/4 கிலோ
நெய் - 50 கிராம்
முந்திரி - 6
திராட்சை - 10 கிராம்
செய்முறை:
கேரட்டை துருவிக் கொள்ளவும். கனமான கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துவிட்டு, கேரட்டை போட்டு வதக்கவும்.
பிறகு காய்ச்சிய பாலை ஊற்றி வேகவிடவும். கேரட் வெந்து பால் வற்றியவுடன் பின்ச் உப்பு போட்டு, சர்க்கரை சேர்த்து கிளறும்போது முந்திரி, திராட்சையை போட்டு சுருள கிளறி இறக்கி பரிமாறவும்.