இராகி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
இராகி மாவு - 1 கப்
பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1/2 கப்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
துருவிய வெல்லம் - 1/2 கப்
ஏலக்காய் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
இராகி மாவை வெறும் வாணலியில் குறைந்த தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் பாசிப்பருப்பை மிதமாக சிவக்கும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி, 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொதித்தவுடன் துருவிய வெல்லத்தைப் போட்டுக் கரைத்து வடிகட்டவும்.
வடிகட்டிய வெல்லக் கரைசலை அடுப்பில் வைத்து மிதமாக கெட்டியாகும் வரை கிளறவும்.
அதனுடன் சிறிது சிறிதாக இராகி மாவைச் சேர்த்துக் கிளறவும்.
கெட்டியான பதம் வந்ததும் தேங்காய்த் துருவல், பாசிப்பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
கலவை மிதமான சூட்டில் இருக்கும் போதே சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும்.