இன்ஸ்டண்ட் ரசகுல்லா

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மில்க்மெயிட் - 200 கிராம்

பனீர் - 250 கிராம்

முந்திரிபருப்பு - 10

பாதாம்பருப்பு - 12

பிஸ்தாபருப்பு - 6

உலர்ந்த திராட்சை - 10

சர்க்கரை - 100 கிராம்

ஏலக்காய் - 4

குங்குமப்பூ - சிறிது

நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் பனீரை நன்கு உதிர் உதிராக உதிர்த்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை ஆகிய நான்கிலும் முக்கால் பாகத்தை போட்டு மிதமான சூட்டில் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பின்னர் வாணலியில் பனீரையும், மில்க்மெய்டையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.

கலவை நன்கு கெட்டியானவுடன் வறுத்து வைத்துள்ள பருப்புகளை போட்டு சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.

குலோப்ஜாமூன் பாகு பதத்தில் இருக்க வேண்டும். இதில் ஏலக்காயை பொடி செய்து போட்டு, அதோடு மீதியுள்ள பருப்புகளையும் போட்டு, குங்குமப்பூவையும் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.

பாகு மிதமான சூட்டில் இருக்கும் போது நாம் தயார் செய்து வைத்துள்ள உருண்டைகளை இதில் போடவும்.

நன்கு ஊறிய பின் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: