இனிப்பு சேவு

on on off off off 5 - Ok!
2 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1 கப்

சோடா மாவு - 2 சிட்டிகை

சர்க்கரை - 1 கப்

உப்பு -- சிறிதளவு

செய்முறை:

கடலைமாவு, சோடா மாவை சலிக்கவும்.அதனுடன் உப்பு சேர்த்து 1 ஸ்பூன் வெண்ணைய் சேர்த்து பிசைந்து தண்ணீர் தேவை எனில் தண்ணீர் சேர்த்து பிசையவும்.

பின் முறுக்கு அச்சில் உள்ள ஒரு ஓட்டை உள்ள அச்சை போட்டு காய்ந்த எண்ணையில் சேவாக சுட்டு சுட்டு எடுக்கவும்.

இதன் நடுவே சர்க்கரையை 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு பாகாக காய்ச்சவும்.

சுட்ட சேவை சூடாக சர்க்கரை பாகில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து தனியே எடுத்து வைக்கவும்.

குறிப்புகள்: