இனிப்பு குழி பணியாரம்s

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 2 டம்ளர்

பச்சரிசி - 2 டம்ளர்

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

பாசிப்பருப்பு - 1 தேக்கரண்டி

சின்ன ஜவ்வரிசி - 1/2 தேக்கரண்டி

வெந்தயம் - 1/4 தேக்கரண்டி

வெல்லம் - 1/4 கிலோ

தேங்காய் துருவல் - 1/4 மூடி

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - சிறிதளவு

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு கிரைண்டரில் போட்டு, ரவை பதத்திற்கு கெட்டியாக அரைக்கவும்.

உப்பு சேர்த்து கரைத்து 5 மணி நேரம் புளிக்க விடவும்.

வெல்லத்தைப் பொடியாக்கி, 1/2 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்.

துருவிய தேங்காய் மாவில் கொட்டி நன்கு கலக்கவும்.

குழி பணியார கல்லில் எண்ணெய் ஊற்றி, பாதி குழி அளவிற்கு மாவு ஊற்றி, மூடி வைத்து, திருப்பி வேக விட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: