இனிப்பு அப்பம்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்

சர்க்கரை - 1 1/2 கப்

அரிசி மாவு - 1/2 கப்

வாழைப்பழம் - 2 அல்லது 1 முட்டை

சோடா உப்பு - 1 சிட்டிகை

பொடித்த ஏலக்காய் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மைதா மாவு, அரிசி மாவு, ஏலக்காய், வாழைப்பழம் அல்லது முட்டை, சர்க்கரை, சோடா உப்பு இவற்றை ஒன்றாக கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், ஒவ்வொன்றாக ஊற்றி பிரவுன் நிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: