இனிப்புச் சீடை

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரிசிமாவு - 2 1/2 கப்

உளுந்து - 1 கப்

வெண்ணெய் - 2 தேக்கரண்டி

நுணுக்கிய வெல்லம் - 1 1/2 கப்

ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

தேங்காய் - 1/2 மூடி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.

அரிசி மாவு, உளுந்து மாவு, ஏலப்பொடி, வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து, கட்டியில்லாமல் கையால் கலந்து கொள்ளவும்.

தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தேங்காய் பாலுடன் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

கரைசலை ஒரு வடிகட்டி கொண்டு வடிகட்டிக் கொள்ளவும்.

இந்த வெல்லம் கலந்த தேங்காய் பாலை சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்து பதமான சப்பாத்தி மாவுப் போல பிசையவும்.

பிறகு அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு துணியின் மீது பரப்பி வைத்து விடவும்.

ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.

ஒரு வாணலியில் சீடை பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் விட்டு, சூடேறியதும் உருட்டி வைத்துள்ள சீடைகளை எடுத்துப் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: