இஞ்சி பர்பி (1)
0
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 50 கிராம்
ஜாதிப்பத்ரி - 50 கிராம்
சீனி - 100 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
இஞ்சியை அம்மியில் வைத்து அரைத்தெடுத்து தண்ணீரில் கரைத்து ஒரு துணியில் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
அதேபோல் ஜாதிபத்ரியையும் அரைத்து நீரில் கரைத்து சக்கையை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கல்சட்டியில் சீனியைப் போட்டு முதலில் இஞ்சி நீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
சிறிது நீர் சுண்டியதும் ஜாதிப்பத்ரி சாற்றினை விட்டுக் கிளறவும்.
நீர் நன்கு சுண்டியதும் நான்கு தேக்கரண்டி நெய் விட்டு கிளறவும்.
பர்பி பதத்திற்கு வந்ததும் இறக்கி ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, ஆறியதும் துண்டுகள் போட்டுக் பரிமாறவும்.