ஆலு ஜாமூன்
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 2
கோவா - அரை கப்
நெய் - 50 கிராம்
சர்க்கரை - ஒரு கப்
எண்ணெய் - 300 மி.லி
ஏலக்காய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
எசன்ஸ் - ஒரு துளி
செய்முறை:
உருளையை வேகவைத்து கட்டிகள் இல்லாமல் மசித்துகொள்ளவும். ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நெய் விட்டு கோதுமை மாவை சிறுதீயில் வாசம் வரும் வரை வறுக்கவும்.
ஒரு பேஸினில் வறுத்த கோதுமைமாவு, மசித்த உருளைக்கிழங்கு, கோவா ஆகியவற்றை போட்டு நன்கு பிசையவும்.
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையுடன் 3/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு பிசுப்பிசுப்பு வரும் வரை காய்ச்சி இறக்கி ஏலக்காய்பொடி போட்டு வைக்கவும்.
பிசைந்ததை உருண்டையாகவோ, தட்டையாகவோ உருட்டி கடாயில் எண்ணெய், சிறிது நெய் விட்டு சிறுதீயில் பொரித்தெடுக்கவும்.
பொரித்த உருண்டைகளை ஜீராவில் போட்டு 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.