ஆரஞ்சு கேக்

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - 1 1/2 கப்

பெரிய ஆரஞ்சு பழம் - 1

சர்க்கரை - 3/4 கப்

முட்டை - 2

எண்ணெய் + வெண்ணெய் - 1/4 கப்

பேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி

பால் - 1/2 கப்

செய்முறை:

மைதாவுடன், பேக்கிங் பவுடரை கலந்து கொள்ளவும். அவனை 180 C’ல் முற்சூடு செய்யவும். பேக் செய்ய போகும் பேனில் / லோப் ட்ரேயில் சிறிது எண்ணெய் தடவி மாவு தூவி வைக்கவும்.

ஆரஞ்சு பழத்தை 4 துண்டுகளாக வெட்டி தோலோடு மிக்ஸியில் அரைக்கவும்.. அதனுடன் அரை கப் சர்க்கரை சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளவும். (பெரியதாக தோல் ஏதும் இல்லாமல் பார்த்து அரைக்கவும்).

முட்டையை நன்றாக கலந்து அடிக்கவும்.

அரைத்த ஆரஞ்சு கலவையில் மீதமுள்ள சர்க்கரை, வெண்ணெய் மற்றும் எண்ணெயை கலந்து கொள்ளவும்.

பிறகு முட்டை கலந்து, பால் சேர்த்து கலக்கவும்.

இதனை மாவுக் கலவையில் சேர்த்து கலக்கவும். அதிகம் கலக்க வேண்டாம். விரும்பினால் சிறிது பட்டை தூள் சேர்க்கலாம். உடனே பேக்கிங் பேனில் ஊற்றவும்.

180 C’ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும். 15 - 25 நிமிடத்தில் கேக் தயார். உள்ளே விட்ட கத்தி சுத்தமாக வெளியே வரும் போது எடுக்கவும்.

சுவையான ஸாஃப்ட் ஸ்பாஞ்சி ஆரஞ்சு கேக் தயார்.

ஆரஞ்சு க்ளேஸ் செய்ய: ஆரஞ்சு சாறு அரை கப்புடன் அரை கப் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும். பாதியாக அளவு குறைந்து வரும் போது சூடான கேக்கின் மேல் பரவலாக ஊற்றவோ அல்லது ப்ரெஷ் கொண்டு தேய்த்தோ விடலாம்.

குறிப்புகள்:

இதே கேக்கை ஆரஞ்சு ஜூஸ் விட்டு மாவை கலந்து ஆரஞ்சு தோலை சீவி போட்டும் செய்யலாம். ஆனால் மேல் சொன்ன முறையில் செய்யும் போது ஆரஞ்சு ஃப்ளேவர் தூக்கலாக அருமையாக இருக்கும்.

ஆரஞ்சு சாறு குறைவான வகையாக இருந்தால் இன்னும் சிறிது பால் அல்லது ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து மாவின் பதத்தை சரி செய்யலாம்.