ஆரஞ்சுப்பழ கேசரி
0
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
சர்க்கரை - 2 கப்
ஆரஞ்சுப்பழம் - 2
நெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரி - சிறிதளவு
திராட்சை - சிறிதளவு
ஏலக்காய் - 5
கேசரி கலர் - தேவைக்கு
செய்முறை:
முதலில் ரவையை நன்றாக வறுக்கவும். பின்னர் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஆரஞ்சு ஜூஸ் அல்லது ஆரஞ்சு சுளையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். தேவைப்பட்டால் கேசரி கலர் சேர்க்கவும்.
கொதி நிலைக்கு வந்தவுடன் வறுத்த ரவையை சேர்த்து கட்டி பிடிக்காமல் நன்றாக கிளறவும்.
பின்னர் அதனுடன் ஏலக்காய் பொடி, மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
தனியாக ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனை கேசரி கலவையுடன் சேர்க்கவும்.