ஆப்பிள் ஹல்வா
தேவையான பொருட்கள்:
நல்ல இனிப்புள்ள சிகப்பு ஆப்பிள் - 2
நெய் - 1/4 கப்
சர்க்கரை - 1/4 கப்
மில்க் பௌடர் - 2 தேக்கரண்டி
ஏலத்தூள் - 1 தேக்கரண்டி
முந்திரி - 4
செய்முறை:
ஆப்பிளை தோல் சீவி துண்டுகளாக்கவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் அல்லது புட் ப்ரோஸசரில் ஆப்பிள் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைக்கவும்.
அரைத்த விழுதினை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு நாண் ஸ்டிக் கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து எடுக்கவும்.
அதே கடாயில் மேலும் சிறிது நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள ஆப்பிள் கலவையை போட்டு நன்றாக கிளறவும்.
மேலே சிறிது நெய் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறவும்.
மில்க் பௌடர், சர்க்கரை சேர்த்து கை விடாமல் நெய் சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வராமல் இருக்கும் போது அடுப்பை அணைத்து எடுக்கவும்.
ஹல்வாவை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து மேலே முந்திரி தூவி அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்புகள்:
ஆப்பிளை அரைத்தவுடன் குறைவாக தான் இருக்கும் அதிகம் தேவைப்பட்டால் இதன் அளவினை அதிகரித்துக் கொள்ளவும்.