ஆப்பிள் கொழுக்கட்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மேல் மாவுக்கு:

அரிசி மாவு - 2 கப்

உப்பு - 1/2 தேக்கரண்டி

பூரணத்திற்கு:

ஆப்பிள் (துருவியது) - 1

தேங்காய் துருவல் - 1 கப்

ப்ரவுன் சுகர் பவுடர் - 1/4 கப்

ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி

செய்முறை:

அரிசி மாவுடன் உப்புச் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி இடியாப்ப மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

ஆப்பிள் துருவலுடன் தேங்காய் துருவல், ஏலக்காய்ப் பொடி மற்றும் சக்கரையைச் சேர்க்கவும்.

அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி நன்கு கலந்து பூரணத்தைத் தயார் செய்யவும்.

பிசைந்து வைத்துள்ள மாவில் எலுமிச்சை அளவிற்கு மாவை எடுத்து கிண்ணம் போல செய்து அதனுள்ளே பூரணம் வைத்து உருட்டிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். உருண்டை வெந்ததும் மேலே எழும்பி வரும்.

வெந்த உருண்டைகளை எடுத்து, உடனேயே தேங்காய் துருவலில் பிரட்டி எடுக்கவும்.

அதன் மேல் முந்திரி வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்புகள்:

பூரணம் தயார் செய்த உடனேயே கொழுக்கட்டையை செய்துவிட வேண்டும். இல்லையெனில் பூரணம் நீர்த்துப் போய்விடும். நீர்த்து போகாமல் பார்த்துக் கொள்ளவும்.

நீர்த்து போய்விட்டால் அடுப்பில் வைத்து நீர் வற்றும் வரை வதக்கியெடுத்து, பிறகு செய்யவும். (நான் பூரணம் தயார் செய்த உடனேயே செய்துவிட்டதால் வதக்கியெடுத்து செய்யவில்லை).

வேக வைத்து எடுத்ததும் தேங்காய் துருவலில் போட்டு பிரட்டிவிடவும். இல்லையெனில் சற்று அழுத்தமாகத் தெரியும்.