ஆப்பிள் அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - 1

பால் - 1/4 லிட்டர்

முந்திரி - தேவையான அளவு

நெய் - 2 மேசைக்கரண்டி

கோதுமை மாவு - 4 தேக்கரண்டி

சர்க்கரை - 6 தேக்கரண்டி

ஏலக்காய் தூள் - தேவையான அளவு

கலர் - சிறிது விரும்பினால்

செய்முறை:

ஆப்பிளை விதை நீக்கி துண்டுகளாக்கி காய்ச்சிய பாலில் சேர்த்து மூடி வேக விடவும்.

வெந்த ஆப்பிளை பாலில் இருந்து எடுத்து மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்கவும். நீர் சேர்க்க வேண்டாம்.

கோதுமை மாவை கடாயில் வாசம் வர வறுக்கவும்.

இப்போது ஆப்பிள் வேக வைத்த பாலிலேயே அரைத்த விழுதை சேர்த்து கலந்து விடவும்.

இதில் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டி ஆகாமல் கலக்கவும்.

இத்துடன் கலர் கலந்த நீர், சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.

கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் தூள், நெய் சேர்த்து கலந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது எடுக்கவும்.

குறிப்புகள்:

ஆப்பிளை தோல் நீக்கியும் செய்யலாம், தோலோடும் செய்யலாம். கலர் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, தோலோடு இருந்தால் சிறு சிகப்பு புள்ளிகள் வைத்தது போல் பார்க்க அழகாகவே இருக்கும்.