ஆகாவா அல்வா
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் துண்டுகள் (தோல் சீவி பொடியாக நறுக்கிய) - 1 கப்
காரட் துருவல் - 1 கப்
வாழைப்பழ துண்டுகள் - 1 கப்
தேங்காய் துறுவல் - 1 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 10
செய்முறை:
முதலில் ஆப்பிளை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
காரட்டை சிறிது பால் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
வாழைப்பழத்தை பொடியாக நறுக்கவும்
பின் முந்திரி ,ஏலக்காயை நெய்யில் வறுத்து தனியே பொடித்து வைக்கவும்.
பின் வாணலியில் பழங்கள், தேங்காய் துருவல், பால் சேர்த்து மிதமான தீயில் கிளறி கொண்டே இருக்கவும்.
கொஞ்சம் கெட்டியானவுடன் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரைந்ததும் இடையிடையே, நெய் சேர்த்து கிளறவும்.
வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது ஏலக்காய் தூள் முந்திரி சேர்க்கவும்.
குறிப்புகள்:
சீக்கிரம் முடிக்க தீயை கூட்டாமல், மிதமான தீயிலேயே செய்யவும்.