அவல் பாயசம் (2)
தேவையான பொருட்கள்:
அரிசி - 1/4 கப்
கோதுமைரவை - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
அவல் - 1/4 கப்
வெல்லம் பொடி பண்ணினது - 2 1/2 கப்
பால் - 1 கப்
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
நறுக்கின முந்திரி - 2 மேசைக்கரண்டி
திராட்சை - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
அரிசி, கோதுமைரவை, பாசிப்பருப்பு, கடலைபருப்பு, அவல் முதலியவற்றைத் தனித் தனியே வெறும் வாணலியில் வாசனை வரப் பிரட்டிக் கொள்ளவும்.
இதை நன்றாகக் கழுவி விட்டு, 4 கப் தண்ணீரில் பிரஷர் பானில், 2 விசில் வரும்படி வேக வைக்கவும்.
ஓசை அடங்கித் திறப்பதற்குள், அடுப்பில் இரண்டரைக் கப் பொடி பண்ணின வெல்லத்தை அரை கப் தண்ணீரில் நன்கு கரைய விடவும்.
நன்றாக 5 நிமிடங்கள் பாகு கொதிக்கட்டும். பிறகு குக்கரைத் திறந்ததும், பாகை அதில் வடிகட்டி விடவும்.
ஏலப்பொடி போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
இறக்கி வைத்ததும் பாலை விட்டு நன்றாகக் கிளறி விடவும்.
நெய்யைக் காயவைத்து முந்திரி, திராட்சை வறுத்துப் போட்டு பரிமாறவும்.
குறிப்புகள்:
சற்றுத் தளர வேண்டும் என்றால் பால் சிறிது கூட விடலாம்.