அவல் கேசரி (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவல் - 1/2 கப்

நெய் - 2 மேசைக்கரண்டி

முந்திரி - சிறிது

ஏலக்காய் தூள் - சிறிது

சர்க்கரை - 1/4 கப் அல்லது தேவைக்கு

நீர் - 3/4 கப்

கேசரி கலர் - ஒரு சிட்டிகை

செய்முறை:

பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் அவலை வறுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைக்கவும்.

கொதிக்கும் நீரை அவலில் சேர்த்து கேசரி கலர் சேர்த்து வேக விடவும்.

அவல் வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.

சர்க்கரை கலந்து வந்ததும் ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விடவும்.

தேவைக்கு நெய் சேர்க்கலாம். சுவையான அவல் கேசரி தயார்.

குறிப்புகள்:

நான் பயன்படுத்தியது மெல்லிய அவல்.

நீங்கள் பயன்படுத்தும் அவலுக்கு ஏற்றபடி நீரின் அளவு மாறுபடும்.

அதனால் கூடுதலாகவே நீரை கொதிக்க வைத்து கொதி நிலையில் வையுங்கள். வேகாமல் இருந்தால் மீண்டும் சேர்க்கலாம்.