அவல் உருண்டை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

சீனி - 1/2 கப்

நெய் - 3/4 கப்

அண்டிபருப்பு (முந்திரி பருப்பு) - 10

கிஸ்மிஸ்பழம் (திராட்சை) - 10

ஏலக்காய் (தூள் செய்துக்கொள்ளவும்) - 1

செய்முறை:

ஒரு வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு அதில் அவலை கொட்டி வறுக்கவும்

வறுத்த அவலை சிறிது நேரம் ஆறவைக்கவும்.

பின்னர் அவலையும், சீனியையும், தட்டிவைத்த ஏலக்காய்தூள் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு தாளிப்பு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் விட்டு அதில் அண்டிபருப்பு, கிஸ்மிஸ்பழம் போட்டு சிவக்க வறுத்து அரைத்த கலவையில் போட்டு கிளறவும்.

மீதி உள்ள நெய்யை சூடாக்கி அதை அவல் கலவையில் கொட்டி நன்றாக கிளறி விட்டு பின் கை பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.

குறிப்புகள்:

இந்த அவல் உருண்டையை காற்று போகாத டப்பாவில் வைத்தால் ஒரு மாதம் வரை கெட்டு போகாது.