அவல் இனிப்பு பணியாரம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
வெல்லம் - 100 கிராம்
அவல் - 1/2 கப்
ஏலக்காய் - 4
தேங்காய் பல் - 1/4 கப்
உப்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். வெல்லத்தை தூள் செய்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்யவும்.
அரிசி ஊறியதும் கழுவி கிரைண்டரில் போட்டு அதனுடன் அவல், உப்பு போட்டு கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து எடுத்த மாவை புளிக்க வைக்கவும். இரவு செய்ய வேண்டுமென்றால் காலையில் அரைத்து வைத்து விடவும்.
மாவு புளித்ததும் அதில் தேங்காய் பல் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு 3/4 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரையும் வரை காய்ச்சவும்.
அதை மாவுடன் ஊற்றி எல்லாவற்றையும் சேர்த்து மாவை நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
பணியாரக் கல்லில் எண்ணெய் ஊற்றி அதில் ஒவ்வொரு குழியிலும் முக்கால் அளவு மாவை ஊற்றி அதன் மேல் எண்ணெய் ஊற்றி வேக விடவும்.
4 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.