அரிசி மிட்டாய்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்

பச்சரிசி - 1 கப்

சர்க்கரை - 5 கப்

தேங்காய் எண்ணைய் - 2 1/2 கப்

செய்முறை:

அரிசியையும் உளுந்தையும் ஊறவைத்து நன்கு வடைக்கு ஆட்டுவது போல ஆட்டி ஒரு மணி நேரம் வெய்யிலில் வைத்து புளிக்க விட வேண்டும்.

மாவு தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.

சர்க்கரையை கம்பி பதத்தில் காய்ச்சி வைக்க வேண்டும்.

வாணலியில் தேங்காய் எண்ணையை காய வைக்க வேண்டும்.

மாவை ஜிலேபியை சுடுவது போல் சுட்டு எண்ணையில் போட்டு பொரித்து சூடுடன் சர்க்கரை பாகில் போட்டு பாகில் ஊறியதும் எடுத்து தனியாக எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: