அரிசி மாவுருண்டை (1)
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
கருப்பட்டி (பொடித்தது) - 1/2 முதல் 3/4 கப் (இனிப்புக்கு ஏற்ப)
ஏலக்காய் பொடி- 1/4 தேக்கரண்டி
சுக்கு பொடி - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
பச்சரிசியை இரண்டு மணிநேரம் ஊற வைக்கவும்.
ஊறவைத்த அரிசியை தண்ணீரை வடித்து சுத்தமான துணியில் இட்டு உலர்த்தவும்.
கையில் ஈரம் ஒட்டாத அளவு உலர்ந்ததும் மிக்சியில் இட்டு பொடித்து மாவாக்கி சலித்து வைக்கவும்.
இந்த மாவுடன் மற்ற பொருட்களை கலந்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடிக்கவும்.
குறிப்புகள்:
தண்ணீர் சேர்க்க வேண்டாம். கருப்பட்டி, தேங்காயில் இருந்து வரும் ஈரப்பதமே போதுமானது