அரிசி மாவுருண்டை

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

பொடி செய்த கருப்பட்டி (இனிப்புக்கேற்ப) - 3/4 கப் அல்லது 1 கப்

ஏலக்காய் பொடி - 1/4 தேக்கரண்டி

சுக்குப் பொடி - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

பச்சரியை 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து சுத்தமான துணியில் பரப்பி உலர விடவும்.

அரிசியை தொட்டால் கையில் ஈரம் ஒட்டாத அளவுக்கு உலர்ந்ததும் மிக்சியில் இட்டு மாவாக்கி சலித்துக் கொள்ளவும்.

சலித்த மாவுடன் தேங்காய் துருவல், கருப்பட்டி, ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்த்து பிசிறவும்.

பிசிறிய மாவு கையால் பிடித்தால் உருண்டையாகும் அளவிற்கும், உதிர்த்தால் உதிர்ந்து போகும் அளவிற்கும் ஈரப்பதம் உடையதாக இருக்கும். உருண்டையாக பிடிக்கவரவில்லை என்றால் மேலும் சிறிது தேங்காய் துருவல் சேர்க்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

பிறகு மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக பிடித்தால் சுவையான, சத்தான அரிசி மாவுருண்டை தயார்.

குறிப்புகள்:

குமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தவுடன் இந்த மாவுருண்டை செய்து கொடுப்பார்கள். ஏலக்காய் சுக்கு வாசனை பிடிக்காதவர்கள் தவிர்க்கலாம். எல்லாமே பச்சையாக சேர்ப்பதால் சீக்கிரம் கெட்டுப்போகும். ஃப்ரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதை பதப்படுத்தப்பட்ட அரிசி மாவில் செய்ய முடியாது. இந்த மாவுருண்டையை சாப்பிட்ட பின்பு அரை மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்கக் கூடாது. தேவைப்பட்டால் கால் கப் தண்ணீர் குடிக்கலாம். அதற்கு மேல் வேண்டாம். சாப்பிட்ட உடனே அதிகமாக தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.