அரிசி பாயாசம்
தேவையான பொருட்கள்:
உடைத்த அரிசி - 100 கிராம்
பால் - 3 கப்
வெல்லம் - 1 கப்
முந்திரி - 12 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்)
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் - 1 1/2 மேசைக்கரண்டி
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் உடைத்த அரிசியை போட்டு 4 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
அதை குக்கரில் போட்டு 2 கப் பால் ஊற்றி சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும்.
2 விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வைத்திருக்கவும்.
வாணலியில் வெல்லத்தை போட்டு 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைய விடவும்.
குக்கரை இறக்கி வைத்து திறந்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு சர்க்கரை பாகை ஊற்றி கிளறி விடவும்.
அதில் மேலும் ஒரு கப் பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.
மீண்டும் அதை அடுப்பில் வைத்து ஒரு கொதி வரும் வரை வைத்திருக்கவும்.
சிறிய கடாயில் நெய் ஊற்றி உடைத்த முந்திரி பருப்பை போட்டு வறுத்து அதை பாயசத்தில் ஊற்றி இறக்கி பரிமாறவும்.