அரிசி பாயசம்
2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 டமளர் (200 கிராம்)
வெல்லம் - 200 கிராம்
முந்திரி - 5
ஏலக்காய் - 4
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
நெய்யை சூடாக்கி, முந்திரியை வறுக்கவும்.பச்சரியை ஒருமணி நேரம் ஊற வைக்கவும்.
அரிசியை மிக்ஸியில் நைசாக அரைக்கவும். தோசை மாவு பதத்தில் கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
வெல்லத்தை தூள் செய்து, 1/4 டம்ளர் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி கொதிக்கும் மாவில் சேர்க்கவும்.
ஏலக்காயை தூளாக்கி சேர்த்து தேவையான அளவு கெட்டியானதும் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கி பரிமாறவும். (தேவைப்பட்டால் சிறிது பால் சேர்க்கலாம்).