அரிசி அல்வா (1)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 1 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
தேங்காய் - 1/2 மூடி
ஏலக்காய் - 3
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
அரிசியினை 2 மணி நேரம் ஊறவைத்து பின் 1 கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு நன்றாக மைய அரைத்து கொள்ளவும்.
கடலைப் பருப்பினை 1/4 மணி நேரம் ஊறவைத்து பின் வேகவைத்து கொள்ளவும்.
வெல்லத்தினை பொடித்து வைக்கவும். தேங்காயினை துருவி கொள்ளவும். ஏலக்காயினை தட்டி கொள்ளவும்.
ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள அரிசி மாவினை போட்டு நன்றாக கிளறி வேகவிடவும்.
மிகவும் கட்டியாக இல்லாமல் இருக்கு வேண்டுமானால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
அரிசிமாவு முக்கால் பதம் வெந்ததும் அதில் பொடித்து வைத்துள்ள வெல்லம் மற்றும் வேகவைத்துள்ள கடலைப் பருப்பினை சேர்த்து கிளறவும்.
வெல்லம் நன்றாக கரைந்து அரிசிமாவும் சேரும் வரை இடையிடையே கிளறிவிடவும்.
வெல்லம் கரைந்து வாசனை போன பிறகு துருவிய தேங்காய் மற்றும் ஏலக்காயினை போட்டு 3 நிமிடம் வேகவிடவும்.
ஒரு தட்டில் மீதம் உள்ள 1 தேக்கரண்டி நெய்யினை தடவி அதில் செய்து வைத்துள்ள அல்வாவினை ஊற்றி ஆறவிடவும்.
சிறிது நேரம் ஆறிய பிறகு வேண்டிய வடிவத்தில் வெட்டி பரிமாறவும்.