அரிசிப் பூரி

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 கப்

நல்லெண்ணெய் - 100 கிராம்

வெல்லம் - 3/4 கிலோ

குங்குமப்பூ - சிறிது

ஏலக்காய் - 10

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசியைக் களைந்து சுத்தம் செய்து மாவாக இடித்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.

அந்த மாவில் நல்லெண்ணெய் விட்டு, சிறிது உப்பும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவினை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி, பூரி இடுவது போல் இட்டுக் கொள்ளவும்.

வெல்லத்தை அளவோடு நீர் விட்டு கம்பிப் பாகு பதத்திற்கு காய்ச்சிக் கொள்ளவும்.

பாகினை இறக்குவதற்கு முன்பு குங்குமப்பூவினையும், பொடித்த ஏலக்காயையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

பிறகு வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு அரிசிப் பூரிகளைப் போட்டு பொரித்து எடுத்து வெல்லப் பாகில் போடவும்.

பூரி பாகில் நன்கு ஊறியபின் எடுத்துப் பரிமாறவும்.

குறிப்புகள்: