அம்பலப்புழா பால் பாயாசம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி அல்லது பாசுமதி அரிசி - 2 மேசைக்கரண்டி
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் - 3
முந்திரி - 10
கிஸ்மிஸ் - 10
நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
அரிசியை 10 நிமிடம் ஊறவைத்து பின்னர் சுத்தமான துணியில் உலர்த்தவும்.
உலர்த்திய அரிசியை மிக்ஸியில் லேசாக பொடித்து குருணையாக செய்யவும். (பச்சரிசி குருணையும் பயன்படுத்தலாம்)
உடைத்த அரிசியை அரை லிட்டர் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்.
பால் கொதித்ததும் சிம்மில் வைத்து அரிசியை வேக விடவும். 1 டேபுள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். பால் குறுகி வரும் போது மீதியுள்ள பாலை சேர்க்கவும்.
அரிசி நன்றாக வெந்ததும் ஏலக்காயை சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும்.
பால் குறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சர்க்கரை சேர்க்கவும்.
மீதமுள்ள நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து பாயாசத்தில் சேர்த்து பரிமாறவும்.