அன்னாசி கேக்

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பழுத்த அன்னாசி - 1

மைதாமாவு - 200 கிராம்

வெண்ணைய் - 150 கிராம்

முட்டை - 4

சர்க்கரை (பொடித்துக் கொள்ளவும்) - 150 கிராம்

செர்ரி - 6

பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்

அன்னாசி எசன்ஸ் - சில துளி

மஞ்சள் கலர் - 2 சிட்டிகை

நாட்டு / வெல்ல சர்க்கரை - 4 ஸ்பூன்

செய்முறை:

அன்னாசியை தோல் சீவி வில்லைகளாக போட்டுக் கொள்ளவும்.

வெண்ணையையும் சர்க்கரையையும் நன்றாக குழைத்துக் கொள்ளவும்.

முட்டைகள் நன்றாக அடிக்கவும்.

அடித்த முட்டையைச் சிறிது சிறிதாக சர்க்கரை கலவையில் ஊற்றி தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கவேண்டும்.

அத்துடன் எசன்ஸ்,கலர் சேர்க்கவும்.

பேக்கிங்பவுடர்.மைதாமாவு இரண்டையும் கலந்து சர்க்கரை கலவையில் சேர்க்கவும்.

10 அங்குல கேக் தட்டில் 20 கிராம் வெண்ணையை சமமாக தடவிக் கொள்ளவும்.

நாட்டு / வெல்ல சர்க்கரையை மேலாக சமமாகத் தூவி விடவும்.

அன்னாசி வில்லைகளை கேக் தட்டில் அழகாக வைக்கவும்.

நடுவில் செர்ரி பழங்களை பாதியாக வெட்டி வைக்கவும்.

அன்னாசி வில்லைகள் மீது கலவையை மெதுவாக போடவும்.

வில்லைகளை நகராமல் இருக்குமாறு செய்யவேண்டும்.

375 டிகிரி சூட்டில் 40 நிமிடம் வரை ஓவன் அடுப்பில் வைத்து பேக் செய்யவும்.

கேக் ஆறிய பிறகு ஒரு தட்டில் கவனமாக திருப்பவும்.

குறிப்புகள்: