அதிரச மாவு பணியாரம்
0
தேவையான பொருட்கள்:
அதிரச மாவு - 1 கப்
பால் - தேவையான அளவு
நெய்யில் வறுத்த தேங்காய் - 1/2 கப்
சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அதிரசமாவு, நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகள், சோடா உப்பு இவை அனைத்தையும் தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவை, தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடுப்படுத்தவும். காய்ந்த கல்லில் அவரவர் விருப்பத்திற்கேற்றார் போல எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு கலந்து வைத்திருக்கும் மாவை ஒவ்வொரு குழியிலும் முக்கால் அளவு ஊற்றிக் கொள்ளவும்.
ஒரு பக்கம் வெந்ததும் அடுத்தப் பக்கத்தை திருப்பி விட்டு வேக விடவும்.