அதிரசம் (4)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 400 கிராம்
வெல்லம் - 400 கிராம்
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியை போதுமான நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து பின் நீரை வடிகட்டி நிழலில் உலர்த்தவும்.
ஓரளவு ஈரப்பசை இருக்கும்போதே மிக்ஸியில் மாவாக்கவும்.
மூன்று முறை சலிக்கவும்.
வெல்லத்தைப் பொடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து வெல்லத்தை அதில் போட்டு அது மூழ்குமளவு நீர் ஊற்றறி பாகு காய்ச்சவும்.
பாகு கொதிக்க ஆரம்பிக்கும்போது அதை வடிக்கட்டி ஏலப்பொடி சேர்த்து மறுபடியும் காய்ச்ச ஆரம்பிக்கவும்.
பாகு இளம்பாகு பதம் வரும்போது, கெட்டியாக ஆரம்பிக்கும்.
ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த நீரை எடுத்து வைத்துக் கொண்டு, கொதிக்கும் பாகில் ஒரு சொட்டை எடுத்து அதில் ஊற்றினால் பாகு மெழுகுபோல கையில் திரட்ட வரவேண்டும்.
இதுதான் சரியான பதம்.
அப்போது அடுப்பை நிறுத்தி, கொஞ்சம் பாகை தனியே எடுத்து வைத்துக் கொண்டு, மீதிப்பாகில் மாவை கொஞ்சம் கொஞ்சமாகத்தூவி மாவை நன்கு கலக்க வேண்டும்.
சப்பாத்திமாவுப்பதத்தை விட சற்று இளகலாக அதிரச மாவுப்பதம் இருக்க வேண்டும்.
பாகு தேவைப்பட்டால் எடுத்து வைத்துள்ள பாகை கொஞ்சம் கொஞ்சமாக உபயோகித்துக் கொள்ளலாம்.
பாகின் மீது நெய்ய சமமாகப் பரப்பி மூடி வைக்கவும்.
இரண்டு நாட்கள் கழித்து மிதமான தீயில் அதிரசங்களைத்தட்டி, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
குறிப்புகள்:
வெல்லம் உருண்டை வெல்லமாகவோ அச்சு வெல்லமாகவோ அல்லது இரண்டும் சேர்ந்தாற்போல இருப்பது நல்லது. பழுப்பு வெல்லம் சுவையைத்தராது.