அதிரசம் (2)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1/2 கிலோ

மண்டை வெல்லம் - 400 கிராம்

நசுக்கிய ஏலக்காய் - 5

நல்லெண்ணைய் - 1/2 லிட்டர்

செய்முறை:

பச்சரிசியை ஊறவைத்து மாவாக இடித்து சலித்து ஏலக்காய் சேர்த்து வைக்கவும்.

வெல்லத்தை தட்டி தண்ணீர் தெளித்து சிம்மில் வைத்து பாகாக காய்ச்சவும்.

கொஞ்சம் ஒட்டும் பதம் வந்ததும் பாகை இறக்கி மாவை சேர்த்து கொஞ்சம் எண்ணைய் ஊற்றி பிசையவும்.(வாணலியில் வைத்து காய்ந்த எண்ணைய் என்றால் மொறு மொருப்பாக வரும்)

வாணலியில் எண்ணையை காய வைத்து, எலுமிச்சம் பழ அளவு மாவு எடுத்து அதை பிளாஸ்டிக் கவர் அல்லது இலையில் எண்ணைய் தடவி மாவை தட்டி எண்ணையில் போடவும்.

மெதுவாக திருப்பி சிவந்ததும் எடுத்து இரண்டு கரண்டியால் எண்ணையை பிழிந்து எடுத்து வைக்கவும்.

குறிப்புகள்:

பத்து நாள் வரை கூட கெடாமல் இருக்கும்.