அச்சு முறுக்கு (3)
3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கிலோ
முட்டை - 2
சர்க்கரை - 150 கிராம்
தேங்காய் - 1
எண்ணெய் - சுடுவதற்கு
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
அரிசியைக் கழுவி, 1/2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நிழலில் உணர வைக்கவும்.
மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்து வைக்கவும்.
தேங்காயை துருவி, கெட்டியான பால் எடுக்கவும்.
சர்க்கரையை தேங்காய் பாலில் கரைக்கவும்.
முட்டையை உடைத்து அடித்து வைக்கவும்.
மாவு, தேங்காய் பால், உப்பு, முட்டை சேர்த்து தோசைப் பதமாக கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் காய வைத்து, மாவு கலவையை அச்சை நனைத்து எண்ணெயில் விடவும்.
சிறிது வெந்ததும், அச்சிலிருந்து முறுக்கு தனியாக வந்து விடும்.