அசோகா அல்வா (1)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 1 கப்
கோதுமை - 1/4 கிலோ
சீனி - 2 1/4 கப்
நெய் - 50 கிராம்
டால்டா - 50 கிராம்
ஏலக்காய் - 5
முந்திரி - 25 கிராம்
திராட்சை - 25 கிராம்
எண்ணெய் - 1/2 லிட்டர்
செய்முறை:
முதலில் பயத்தம் பருப்பை வேகவைத்து தண்ணீராக கடைந்து வைத்துக் கொள்ளவும்.
கனமான அலுமினிய பாத்திரத்தில் எண்ணெய், டால்டா இரண்டையும் காய்த்து அதில் கோதுமை மாவை கொட்டி சிவக்கும் வரை கிளறவும்.
வேக வைத்த பயத்தம் பருப்பை அதில் ஊற்றி கிளறவும்.
பிறகு அல்வா பவுடரை கரைத்து ஊற்றி சீனியையும் போட்டு நன்றாக கிளறவும்.
பின் நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து ஏலக்காயை பொடிச் செய்து அசோகாவில் போடவும்.
அரை மணி நேரம் அடுப்பில் தீயை குறைத்து வைத்து கிளறி இறக்கவும்.