அசோகா அல்வா
தேவையான பொருட்கள்:
பயத்தம் பருப்பு - 125 கிராம்
சர்க்கரை - 350 கிராம்
ஏலக்காய் - 3
நெய் - 1/2 கிலோ
கேசரி கலர் - ஒரு சிட்டிகை
கோதுமை மாவு - 250 கிராம்
முந்திரிப்பருப்பு - 30 கிராம்
செய்முறை:
முதலில் பயத்தம் பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும். அளவாக தண்ணீர் வைத்து நன்கு குழைவாக வேக வைத்துக் கொள்ளவும்.
பிறகு, அடி கனமான ஒரு சட்டியை அடுப்பில் வைத்து 100 கிராம் அளவில் நெய் விட்டு கோதுமை மாவை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் வேக வைத்துள்ள பயத்தம் பருப்பு விழுதை அதில் கொட்டவும்.
சர்க்கரையையும், கலர் பவுடரையும் அதனுடன் கலந்து தொடர்ந்து கிளறவும்.
அல்வா பதம் வந்தவுடன் அடுப்பை சிறிய அளவில் எரியவிட்டு சிறிது சிறிதாக நெய்யை விட்டு ஏலப் பொடியைப் போட்டு இறக்கி விடவும்.
பிறகு முந்திரியை சிறுசிறு துண்டுகளாக்கி நெய்யில் சிவக்க வறுத்து அல்வாவில் கொட்டவும்.