ஃப்ரூட் கேசரி
தேவையான பொருட்கள்:
ரவை - ஒரு கப்
ஆப்பிள், அன்னாசி, கொய்யா, மாம்பழம் - 1
சர்க்கரை - 1 1/2 கப்
கலர் - ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் - சிறிது
முந்திரி - சிறிது
நெய் - தேவைக்கு
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
பழங்கள் அனைத்தையும் தோல் நீக்கி, விதை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும். இத்துடன் 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும். 3 கப் தண்ணீரை கொதிக்க வைத்து கொதி நிலையிலேயே வைத்திருக்கவும்.
நாண் ஸ்டிக் பாத்திரத்தில் பாதி நெய் விட்டு முந்திரியை வறுக்கவும்.
இத்துடன் சர்க்கரை கலந்த பழங்கள் சேர்த்து பிரட்டவும்.
இதில் ரவை சேர்த்து வறுக்கவும்.
ரவை வறுபட்டதும் உப்பு சேர்த்து கொதிக்கும் நீரை ஊற்றி கிளறவும். மூடி போட்டு வேக விடவும்.
இது வெந்ததும் கலர் கலந்த ஒரு தேக்கரண்டி நீர் விட்டு, சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியாகாமல் கலந்து விடவும்.
கடைசியாக இன்னும் சிறிது நெய் சேர்த்து எடுக்கவும்.
குறிப்புகள்:
இதில் ஏலக்காய் தூளுக்கு பதிலாக விரும்பிய எசன்ஸ் சேர்க்கலாம்.
ஒரே வகை பழம், அதே எசன்ஸ் சேர்த்தும் தயார் செய்யலாம்.
பழங்களை முதலில் சேர்ப்பதற்கு பதிலாக முடிக்கும் நேரத்தில் சேர்த்தும் செய்யலாம்.
விரும்பும் பழங்களை சேர்க்கலாம்.