ஃபுரூட் கார்ன்மீல் ஸ்வீட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1/2 கோப்பை

கார்ன் மீல் - 3/4 கோப்பை

பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி

பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி

ஏலப்பொடி - ஒரு சிட்டிக்கை

உப்புத்தூள் - ஒரு சிட்டிக்கை

தயிர் - 1/2 கோப்பை

முட்டை - 1

சர்க்கரை - 1/4 கோப்பை

உருக்கிய வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

பைனாப்பிள் துண்டுகள் - 1 கேன் 398 ml

சீவிய பாதாம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

தேன் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

மைதாவுடன், கார்ன்மீல் மற்றும் பேக்கிங்பவுடர், ஆப்பச்சோடா, ஏலப்பொடி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கலக்கி வைக்கவும்.

முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதனுடன் சர்க்கரை, தயிர், வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

பிறகு இதனுடன் மாவு கலவையைக் கொட்டி இலேசாக கலக்கி எண்ணெய் தடவிய வட்டமான பேக்கிங் டிஷ்ஷில் ஊற்றவும்.

அன்னாசிப் பழத்தின் கேனை உடைத்து அதிலிருக்கும் சிரப்பை கலைந்துவிட்டு பழத்துண்டுகளை மட்டும் மாவு கலவையின் மீது பரவலாகப் போடவும்.

பிறகு பாதாம் பருப்பை தூவி கைகளால் சற்று அழுத்திவிடவும். தொடர்ந்து தேனை அதன் மீது பரவலாக ஊற்றவும்.

பின்பு சூடாக்கப்பட்ட அவனை 350 டிகிரி Fல் வைத்து இருபத்தைந்து நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

கேக் வெந்ததை உறுதி செய்துக் கொண்டு வெளியில் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: