BBQ சிக்கன் ப்ரை

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1 கிலோ

பூண்டு - 6 பற்கள்

தயிர் - 1/2 கப்

காஷ்மீரி சில்லி பவுடர் - 1 மேசைக்கரண்டி

ஷான் தந்தூரி மசாலா - 1 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

எலுமிச்சை - 3

ஊற வைக்க ஆலிவ் ஆயில் - 6 தேக்கரண்டி

சுடுவதற்கு ஆலிவ் ஆயில் - தேவைக்கு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

பச்சை மிளகாயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் சிக்கனை நன்கு கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.

சிக்கனுடன் பச்சை மிளகய் விழுது, ஆலிவ் ஆயில், தயிர் சேர்க்கவும்.

அதனுடன் தந்தூரி மசாலா, உப்பு, மிளகாய் தூள் மற்றும் இரண்டு எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு மசாலா சிக்கனில் படும்படி பிசறவும்.

எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்த பின்னர் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

சிக்கன் நன்கு ஊறியதும் BBQ அடுப்பில் நெருப்பு மூட்டி நன்கு பிடித்துக் கொண்டதும் சிக்கன் துண்டுகளை போட்டு சுடவும். ஊறியதில் மசாலா தண்ணீர் அதிகமாக இருக்கும். அதில் வெரும் சிக்கனை மட்டும் எடுத்து வைக்கவும்.

எல்லா சிக்கனிலும் சிறிது ஆலிவ் ஆயில் ஊற்றி ஒரு பக்கம் முழுவதும் சுடவும்.

ஒரு பக்கம் நன்கு வெந்ததும் மற்றொரு பக்கத்தை இடுக்கியைக் கொண்டு திருப்பி போட்டு சுடவும்.

இரண்டு பக்கமும் வெந்ததும் பார்க்கவே சிக்கன் நல்ல சிவந்த நிறத்தில் இருக்கும்.

குறிப்புகள்:

இதற்கு குபூஸ், கார்லிக் சாஸ், சாலட் வைத்து சாப்பிடவும், எண்ணெய் சேர்க்காத உணவு, அதிகம் இடையும் கூடாது.