ஸ்பெஷல் க்ரிஸ்பி சிக்கன் வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்து துண்டங்களாக்கிய கோழி - 1 கிலோ

முட்டை - 1

இஞ்சி, பூண்டு அரைத்த விழுது - 1 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கார்ன் ஃப்ளார் மாவு - 2 தேக்கரண்டி

அரிசி மாவு - 2 தேக்கரண்டி

எண்ணெய் பொரிக்க - 3/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

எண்ணெயைத் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து 8 மணிநேரம் ஊறவிடவும்.

பிறகு எண்ணெயை காயவைத்து சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்தெடுத்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: