ஸ்பெஷல் இறால் வறுவல்





தேவையான பொருட்கள்:
இறால் - 15
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 3/4 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 3
கார்ன் ஃப்ளார் மாவு - 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 5 இலைகள்
எண்ணெய் பொரிக்க - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இறாலில் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை ஒன்றாக கலந்து அரை தேக்கரண்டி தண்ணீர் மட்டும் சேர்த்து கெட்டியாக கலந்து உப்பு பிடிக்க ஊறவிடவும்.
ஒரு மணிநேரம் ஊறியபின் ஒரு வாயகன்ற பானில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் இறாலை மசாலாவோடு சேர்த்து ஒன்றுக்கொன்று ஒட்டாமல் ஒரு 8 இறால் வைத்து ஒரு புறம் சிவந்ததும் மறுபுறமும் சிவக்க விட்டு எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
சாதத்திற்கு அருமையாக இருக்கும்