வெங்காய மீன் ஃப்ரை
0
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1
துண்டு மீன் - 1/4 கிலோ
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
எலுமிச்சைப்பழம் - 1
மிளகாய் - 3
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சைப்பழம் ஊற்றி 2 மணி நேரம் ஊறவிடவும்.
பச்சை மிளகாய், வெங்காயம் அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் ஊறவைத்த மீனைப்போட்டு பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
மீண்டும் வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில், மிளகாய், வெங்காயம் கறிவேப்பிலை மற்றும் போட்டு வதங்கியவுடன் பொரித்தமீனை போட்டு மிதமான தீயில் வதக்கவும். சூடாக பரிமாறவும்