வெங்காய கறி வறுவல்
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
பட்டை, கிராம்பு, ஏலக்காய்தூள் - 1/4 தேக்கரண்டி
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
பட்டை வத்தல் - 5
சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு, சீரகத்தூள் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கறியை கழுவி வைக்கவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டு, சீரகத்தை போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பட்டை, ஏலம் கிராம்பு தூள் சேர்த்து வதக்கவும்.
அதில் கறி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக விடவும்.
அடுப்பில் கடாயை போட்டு சிறிது எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வத்தல், வெங்காயம் போட்டு வதக்கவும்.
அதில் வேக வைத்த கறியை போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வைக்கவும். தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே வரவும் மிளகு, சீரகத்தூள் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.