வாளைமீன் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாளை மீன் - 1/4 கிலோ

மசாலா தூள் - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - தேவையான அளவு

சின்ன வெங்காயம்- 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 3

தேங்காய் பூ- 2 மேசைக்கரண்டி

கருவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் மீனை சுத்தம் செய்து அதில் 2 தேக்கரண்டி மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.

தண்ணீர் முழுவதும் வற்றி மீன் வெந்ததும் இறக்கி நன்கு ஆறவிடவும் ஆறிய பின்னர் மீனில் உள்ள முள்களை நீக்கிவிட்டு சதை பகுதியை மட்டும் தனியாக வைக்கவும்.

வெங்காயம்,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பின் ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை போட்டு வதக்கவும்.பின் பச்சைமிளகாய், தேங்காய் பூ, மசாலாதூள்,மஞ்சள்தூள்,உப்பு, உதிர்த்துவைத்த மீனையும் போட்டு நன்கு வதக்கவும்.

பின் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கிளறவும் தீயை மிதமானதாகவைக்கவும்.

பிடித்து விடாமல் கிளறிக்கொண்டு இருக்கவும். வெங்காயம் ,தேங்காய் பூ நன்கு வதங்கி மீனுடன் சேர்ந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: