வாத்து ரோஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாத்து இறைச்சி - 1 கிலோ

பெரிய வெங்காயம் - 1 கப்

உருளை கிழங்கு - 2

மசாலாதூள் - 2 மேசைக்கரண்டி

தனியா தூள் - 2 மேசைக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

சீரக தூள் - 1 தேக்கரண்டி

சோம்பு தூள் - 1/2 தேக்கரண்டி

கிராம்பு - 2

ஏலம் - 2

பட்டை - 1 துண்டு

இஞ்சி - 1 துண்டு

முழு பூண்டு - 1

வினிகர் - 1/2 மேசைக்கரண்டி

எண்ணெய் - தாளிப்புக்கு

எண்ணெய் - பொரிக்க

உப்பு - தேவையான அள்வு

செய்முறை:

முதலில் உருளைகிழங்கை அரை வேக்காடாக வேகவைத்து ஒவ்வொரு கிழங்கையும் 4 துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

பின் இஞ்சி,பூண்டை தோல் நீக்கிக்கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, கிராம்பு, ஏலம், பட்டை, மசாலா தூள், மஞ்சள் தூள்,தனியா தூள்,மிளகு தூள்,சீரக தூள், சோம்பு தூள் இவற்றை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

சிறிது அரைத்த மசாலாவை தனியாக எடுத்துவைக்கவும்.

பின் கறியை கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி அதில் அரைத்த மசாலாவையும்,உப்பு,வினிகரையும் சேர்த்து பிரட்டி 1 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.

பின் எண்ணெய்யை சூடாக்கி அ6தில் கறித்துண்டுகளை போட்டு பொரித்து தனியாக வைக்கவும்.

பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்த மசாலாவை போட்டு கிளாறி எண்ணெய் பிரிந்து வரும் சமயம் வறுத்து வைத்துள்ள கறித்துண்டுகளை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

கலவை நன்கு கெட்டியாகி இறக்கும் சமயம் உருளைகிழங்கு துண்டுகளை சேர்த்து 1 கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: