வறுத்த மிளகு கோழி
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 4
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை - 1
அன்னாசிப்பூ - 2
கல்பாசி - சிறிது
சீரகம், சோம்பு, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
அரைக்க:
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு
சின்ன வெங்காயம் - 8
வறுத்து தூள் பண்ண:
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை வறுத்து தூளாக்கவும்.
அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்து, மஞ்சள் தூளுடன் கோழிக்கறியை பொடியாக நறுக்கி பிசறி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளவற்றை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீளமாக நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை வதக்கி, பிசறிய கோழியை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியவுடன் மிளகாய்ப்பொடி போட்டு கிளறி ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
தண்ணீர் வற்றி கறி வெந்தவுடன் தூளாக்கிய பொடியை போட்டு சிறுதீயில் 10 நிமிடம் கிளறி இறக்கி பரிமாறவும்.